What an interview :)
Verghese Kurien - AMUL
மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
மெல்ல ஊஞ்சலாடி குலுங்கி குலுங்கி
அசைஞ்சு போகும் கோலம்
பிஞ்சு மனதுடன் ஹோய் பிள்ளைகள் போகுது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ
(மெல்ல ஊர்ந்து ஊர்ந்து)
வானம் ரொம்ப பழையது
மேகம் புதியது
துள்ளிடும் நிலாவுமே என்று பிறந்து வந்தது?
பாதை ரொம்ப நீண்டது
பயணம் சிறியது
யாத்திரை ஓயாதது
நீ செல்லும் முடிவைப் பொருத்தது
முதல்முறை போகும் பயணத்தின் இன்பம்
மறுபடி என்றும் திரும்பி வராது
தூரம் காட்டும் விளக்கொளி
காட்டிப் போகும் நம் வழி
நாளை காலை பொழுது காட்டும் நமக்கும் நல்வழி
மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ
மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
நாலு காலு ஆமைதான் நகர்ந்து போகுதே
தூரம் தாண்டாமலே துவண்டு நின்று தூங்குதே
நாலு அடிக்கு ஓரடி நின்று போகுதே
மேடுகள் கண்டால் இது பின்னோக்கி உருண்டு ஓடுதே
டபடப ஓசை தாளங்கள் போடும்
குபுகுபு என்று புகைவிட்டு பாடும்
பாட்டிக்கதையைப் போலவே பறக்கும் மாயக்கம்பளம்
தேடிப் பிடித்து எடுத்து வா நீ பறந்து போகலாம்
மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ
இசை - இளையராஜா
படம் - நந்தலாலா
பாடல் - நா.முத்துக்குமார்
பாடியவர்: இளையராஜா
Search for "Live Caption" option in google chrome settings.
Helps to see subtitle/live caption for any audio/video played in google-chrome.