Writer(s): S Murali, Yugabharathi, Sabesh Murali
Movie: Pokkisham
Music: Sabesh - Murali
ஆண்: அழகு முகம் மலர்ந்து தாயின் மடி கடந்து
உலகை ரசித்திருக்கம் குழந்தையே
எதிலும் மனம் உடைந்துவெறுமை என உணர்ந்துஎதிலும் மனம் உவந்து பெருமை என உணர்ந்து
தனிமை ருசித்திருக்கும் முதுமையே
சிலர் வாழ்க்கை இன்று தொடங்குமே
வரும் நாளை எண்ணி இயங்குமே
நாம் வாழும் வாழ்க்கை நீண்ட தூரப் பயணமே
அதை வாழ்ந்துப் பார்க்கத் தூண்டும் நம்மை உலகமே
தினம் ஒவ்வொரு நொடியிலும் பயணமே
வரும் ஒவ்வொரு விடியலும் பயணமே
(இசை...)
ஆண்: புதியத் தோற்றங்களும் புதிய மாற்றங்களும்
கனவைத் தருகிறது வாழ்க்கையில்
புதியக் கேள்விகளும் புதியத் தேடல்களும்
முழுமையடைகிறது பூமியில்
இங்கு நீயும் நானும் பயணியே
வரும் வாழ்வும் தாழ்வும் பயணமே
இது காலந்தோறும் மாறிடாமல் தொடருமே
இதைக் காதலோடு ஏற்கவேண்டும் எவருமே
No comments:
Post a Comment