Tuesday, March 16, 2010

மக்களாகிய நாம்... புத்தக விமர்சனம்

மக்களாகிய நாம்...

ஆசிரியர் : அ. கி. வேங்கட சுப்ரமணியன்
கிழக்கு வெளியிடு

இந்தியாவில் மக்களாட்சி நடக்கிறது.. ஆனால் மக்கள் பெருமிதம் கொள்ளும்படி நடக்கிறதா என்று பார்த்தால் .. இல்லை.

இதில் உள்ள பிரச்சனைகளின் வேர்களையும் அதற்கான தீர்வுகளையும் இந்த புத்தகம் முன் வைக்கிறது. பொதுவாக நம் நாட்டின் பிரச்சனைகளை பற்றி பேசுவதும் எள்ளி நகையாடுவதும் பலருக்கு கை வந்த கலை. சிலருக்கு அத்தகைய பிரச்சனைகளை பற்றி விவாதிப்பதும் தீர்வை நோக்கி செல்வதும் முக்கிய நோக்கமாக உள்ளது...ஆசிரியர் அந்த சிலரில் வருகிறார்.


மது விலக்கின் அவசியத்தை பற்றி சில கட்டுரைகள் பேசுகின்றன. அரசு டாஸ்மாக் சாதனைகளை புள்ளி விவரங்களோடு அளிக்கிறார்.

மது விலக்கினை பற்றி இன்னும் பத்து வருடங்கள் கழித்து எவெரேனும் பேசுவார்களா ? சந்தேகம் தான் ! குறிப்பாக ஆட்சியாளர்கள் இனிமேல் இதை பற்றி கவலை கொள்ள போவதில்லை. TASMAC இல்லையெனில் தமிழ் நாடு பட்ஜெட் போட முடியாது போன்ற நிலையில் உள்ளது.


பல நேரங்களில் கிராமங்களில் வாழும் மக்கள் அரசு தரும் சலுகைகளுக்காக அதிகம் எதிர்பார்ப்பது வருத்தம் தருவதாக அமைந்துள்ளது. .

ஆனால் இம்மாதிரி நிகழ்வதற்கு விவசாயம் அதிக அளவில் புறகணிக்க படுவது தான் காரணம். யாருக்கு வரவு ? யாருக்கு செலவு ? என்ற கட்டுரை இதனை புள்ளி விவரங்களோடு அளிக்கிறது.

கடன்களை தள்ளுபடி செய் வதன் மூலமும் , கலர் டிவி பார்ப்பதன் மூலமும் அவர்களின் வாழ்வை மலர்ச்சி வந்து விடுமா? நிரந்தரமான தீர்வு தான் என்ன?


ஜனநாயம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் அவ்வவ்போது கவலை கொள்வதுண்டு. ..ஆனால் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவதற்கு அவை கவலை கொள்வதில்லை, குறிப்பாக ஆட்சியில் உள்ள போது.

உள்ளாட்சி தேர்தல்கள் கட்சி சார்பில்லாமல் நடத்த பட வேண்டிய அவசியத்தினை கட்டுரை முன் வைக்கிறது. பொது மக்கள் உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக பங்கேடுபத்தின் அவசியம் சொல்ல படுகிறது.


தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆசிரியர் பெற்ற விவரங்கள் - சேது சமுத்திர திட்டம் தேவைதானா ? என்ற கேள்வியை எழுப்புகிறது.


எல்லா மனிதர்களுக்குள்ளும் அன்பு ஒளிந்துள்ளது என்று நீங்களோ நானோ சொன்னால் பரவாயில்லை ...27 வருடங்கள் ஜெயிலில் இருந்தவர் வார்டன்களை பற்றி கூறும்போது இதனை சொல்கிறார்.மண்டேலாவின் வார்த்தைகள் தான் அவை.


கட்டுரைகள் அனைத்தும் நம் சிந்தனை தூண்டுபவை .. தீர்வுகளை முன் வைப்பவை.


புத்தகம் வாங்க இங்கே சுட்டுங்கள்

http://nhm.in/shop/978-81-8493-061-0.html




No comments:

Post a Comment